Posts

Showing posts from April, 2018

மனம்

‘நிக்கலஸ் ஏன் அவ்வாறு செய்தான்?’ விடை தேடிக்கொண்டு ஏற்கனவே கிடந்த கேள்விகளோடு, அப்போது இன்னொரு கேள்வியும் இராஜலிங்கத்தின் மனத்துள் சேர்ந்துகொண்டது. ‘அதெல்லாம் கள்ளக் கூட்டம். கறுவல்களோடெல்லாம் சேர்ந்து நீ இனிமேல் விளையாடப் போகவேண்டாம்’ என மகன் அனூஷனுக்கு கண்டிப்புச் சொன்ன ஆனந்தி, கூடத்துள்ளிருந்து எல்லாம் கண்டுகொண்டிருந்த தந்தையிடம் திரும்பி, ‘பாத்தியளேயப்பா, அதுகள் செய்த வேலையை? நாளைக்கு ஸ்கூலுக்குப் போய் இதைப்பற்றி கொம்பிளெய்ன் பண்ணியிட்டு வந்திடுங்கோ. எல்லாத்தையும் இப்பிடியே சும்மா விட்டிடேலாது’ என்றுவிட்டு மேலே போய்விட்டாள். மூன்று நாட்களுக்கு முதல் பள்ளி லொக்கரில் வைத்த அனூஷனின் ஜாக்கெற் அன்றைக்கு திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியை அவள் கொஞ்சம்கூட பட்டுக்கொள்ளவில்லையென அவருக்குத் தெரிந்தது. அதில் சிறிது நியாயமிருப்பதாக இராஜலிங்கம் எண்ணினார். அந்த ஆண்டில்மட்டும் அனூஷனின் இரண்டு ஜாக்கெற்றுக்கள் காணாமல் போயிருக்கின்றன. திரும்பக் கிடைத்திருந்தாலும் அது மூன்றாவது சம்பவம். அனூஷனுக்கு இட்ட கட்டளையின் பின்னாலிருந்த ஆனந்தியின் தீர்மானத்தையா அவரும் அது விஷயத்தில் கொண்டுவிடப்