எனது கவிதை - இழப்பில்லை

இழப்பில்லை  

எங்களைச் சுற்றி நீர் இருந்தது
எங்களைச் சுற்றி பெருவெளி  இருந்தது
அவை மௌனத்தை எம்மீது
திணித்துக்கொண்டிருந்தன
நாம் சுவாரஸ்யம் குலையாத
பேச்சு சுகத்தில்
நட்சத்திரங்கள் கண்சிமிட்டினது கண்டோம்
நிலா சிரித்தது பார்த்தோம்
காற்று உரசியது உணர்ந்தோம்
நிசியும் மறந்திருந்தோம்
காலம் பொசுங்கிப்போனதாய்
இன்று கழிவிரக்கமில்லை
பதினான்கு பதினைந்து வயதுகளில்
இழப்பதெதுவும் அதனதன் அர்த்தத்தில்
இழக்கப்படுவதேயில்லை
நட்சத்திரம்…
நிலா…
தென்றல்…
இன்றுமிருக்கிறதை
அன்றைய காலங்களினூடாகவே
தெரியமுடிகிறது.

-தேவகாந்தன்
சுந்தரசுகன், ஜனவரி 1999


Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்