Posts

Showing posts from May, 2009

ஈழம்: கொடிதுகளின் நிகழ் களம்

நால் திசையும் அளாவியெழுந்த ‘நாடாளுமன்ற’ சர்வாதிகாரங்களின் உக்கிர யுத்தபூமிகளாக பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், ஈராக், ஈழம் ஆகிய நாடுகளெல்லாமே ஆகியிருக்கின்றன என்றபோதிலும், ஈழம் எனது பிறப்பைச் சுமந்த மண் என்ற வகையில், அதை முன்னிறுத்திய உரைக்கட்டாக இது அமைவது தவிர்க்க முடியாததாகின்றது. ஆனாலும் மற்ற நாடுகளின் துயரவெளி சற்றொப்பவும் இதற்குக் குறைந்ததில்லையென்பதில் எனக்கு மாறுபாடான கருத்தில்லை. அதனால் அந்நாடுகளின் யுத்த கொடூரங்களது வெளிப்பாடுகள் இதில் தவிர்க்கமுடியாதபடி இடம்பெறவே செய்யும். இவ்வாறான உரைக்கட்டொன்றினை சிறிதுகாலத்துக்கு முன்னரே நான் எழுதியிருக்கவேண்டும். எண்ணமிருந்தும் நடவாது போயிருக்கிறது. சிறுவயது முதலே பொருள்மையக் கருதுகோள்களில் கொண்டிருந்த பற்று, இதற்கான ஒரு தடையாக ஆகியிருந்திருக்க முடியும். ஆனாலும் எவ்வாறோ அது தவறிப்போய்விட்டது என்பது இப்போது நினைக்கத் துக்கமாகவே இருக்கிறது. பொருண்மியக் கருதுகோள்களையும் மேவிய கலாச்சார, தேசிய இன அடையாளங்கள் முன்னிலைப்பாடடையும் ஓர் அசாதாரண சந்தர்ப்பத்தின் பிறப்பும், பொருண்மியக் கருதுகோள்களின் ஆதாரத்தில் எழுந்த அரசியல் கட்சிகளினதும் மற்றும

ஒரு மரணமும் சில மனிதர்களும்

‘விடுவிக்கப்பட்ட பகுதிக’ளிலிருந்து எழும் அவலங்களின் இலக்கிய சாட்சியம் அண்மையில் எனக்கு வாசிக்கக் கிடைத்த நூல் ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’. தாட்சாயணி எழுதியது. பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு. இதை எழுதியவரைப்பற்றி ஏற்கனவே கேள்வியில் பட்டிருந்தபோதும், இந்நூலைக் கண்டபோது மணிமேகலைப் பிரசுரமாக இது வெளிவந்திருந்த காரணம் சுட்டியே இதை வாங்க மனம் பின்னடித்துவிட்டது. வாசிப்பு என்பது தொழில் சார்ந்த விஷயமல்ல. மனம் சார்ந்தது. பசி வந்தால் ருசி வேண்டாம், நித்திரை வந்தால் பாய் வேண்டாம் என்று எங்கள் ஊரில் ஒரு சொலவடையுண்டு. பசிக்கு ருசி வேண்டாமென்றாலும், மனப் பசிக்கு ருசியும் தேவை. அந்த ருசியை அடைவதற்கான பண்டத்தின் பரிமாற்றமும் அழகியலோடு இருக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு எல்லாரிடமும்தான் இருக்கிறது. பண்டத்தின் தன்மையைக்கூட இந்தப் பரிமாற்றத்தின் அழகியல் காட்டிக்கொடுத்துவிடுகிறது என்பதையும் நாம் புரிந்துகொண்டிருக்கிறோம். இந்த அடிப்படையில் என் தயக்கத்தை உங்களால் புரிந்துகொள்ள முடியுமென நினைக்கிறேன். வாசிப்பை, மைதுனத்தின் கிளர்ச்சி தரும் கூறாகக் கூட விமர்சகர்கள் சிலர் சுட்டியிருக்கிறார்கள். என்றாலும்